ஸ்ரீமதி ராவூரி அல்லி கேஸ்வரி வழங்கும்

ஸ்ரீ அப்போலோ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் "கைலாசகிரி.'

Advertisment

ஆர்.கே. சுரேஷ் முதன்முறையாக இரு வேடங்களில் நடித்துள்ள இதில் மதுபாலா, சாகர், முரளி கிருஷ்ணா, கண்டா சீனிவாசராவ், பூமாரெட்டி, மேகனா ஸ்ரீ லட்சுமி, பேபிஹர்ஷீதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் வசனம் பாடல் களை சாய்மோகன் குமார் எழுத, கன்ஷியாம் இசையமைக்க, முகமது ரபி ஒளிப்பதிவையும், சிவசங்கர் நடனப் பயிற்சியையும், கிருஷ்ணம் ராஜு சண்டைப் பயிற்சியையும், ஜெகதீஷ் பாபு படத் தொகுப்பை யும் கவனித்துள் ளனர்.

rk

Advertisment

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் இப்படத்தை ராவூரி வெங்கடசாமி மிகுந்த பொருட் செலவில் தயாரித்துள்ளார்.

தெலுங்கில் 18 வெற்றிப் படங் களை இயக்கியுள்ள தோட்ட கிருஷ்ணா "கைலாசகிரி' படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி யுள்ளார். ""ஆயிரம் வருடம் பழமையானதும் அதீத சக்தி கொண்டதுமான மரகதலிங்கம் உள்ள கோவிலில் அந்த லிங்கத்தை திருடி விற்க ஒரு திருட்டுக் கும்பல் ஈடுபடுகின்றது. அதை தடுத்து லிங்கத்தை காப்பாற்ற ஆர்.கே. சுரேஷ் முயல்கிறார்.

எப்படி முறியடிக் கிறார். சிவனின் சக்தி எவ்வாறு வெளிப்படுகின்றது என்பதை கிராபிக் காட்சிகள்மூலம் சிறப்பாக படமாக்கி இருக்கிறோம். ஆந்திராவில் சித்தார், திருப்பதி, ஹைதராபாத், காணிப்பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில் ஆகிய இடங்களில் படமாக்கி இருக்கிறோம்'' என்கிறார்.